ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி திமுக பார்வையாளர் மற்றும் பிஎல்ஏ2 பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம், நெமிலி அடுத்தரெட்டிவலம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி. பெருமாள், நெமிலி பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், பனப்பாக்கம் செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்து நாம் தேர்தல் பணியாற்ற தொடங்கி உள்ளோம். மேலும் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒன்றிய அவை தலைவர் நரசிம்மன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேசன், ராகேஷ் ஜெயின் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர். மு.பிரகாசம் .நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment