நெமிலி அருகே மகேந்திரவாடி அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 November 2024

நெமிலி அருகே மகேந்திரவாடி அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறப்பு!.


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த மகேந்திரவாடி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 27 லட்ச  மதிப்பீட்டில் மகேந்திரவாடி அரசினர் மேல்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர். மு க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தராம்பாள் பெருமாள். நெமிலி மத்திய ஒன்றிய திமுக  செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் மகேந்திரவாடி ஊராட்சி மன்ற தலைவர் பரணிகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்து விளக்கேற்றினர். இந்நிகழ்வில் திமுகவின் நெமிலி மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் சரளா முரளி, நெமிலி ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி சம்பத், கிளை செயலாளர் மேலேரி மனோகரன், உதயகுமார், மகேந்திரவாடி கிளை செயலாளர், உலகநாதன், மகேந்திரவாடி கிளை செயலாளர் ராஜாபொன்னையன் மாவட்ட பொறியாளர் அணி முரளி, முக்கேஷ் செயல்வீரர் இளையராஜா, ஜெகதீசன், தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மேலான்மை குழு நிர்வாகிகள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் இதில் கலந்துக்கொண்டனர்.

- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுக்கா

No comments:

Post a Comment

Post Top Ad